இந்தியா - அமெரிக்க உறவு பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்: மோடி
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது,
உக்ரைன் விவகாரம் பலரால் கவனம் பெற்ற நிலையில் இன்று நமது ஆலோசனை நடைபெறுகிறது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியிருந்தனர். அதில் பலர் மாணவர்கள்.
உக்ரைன் - ரஷியா விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிபர்களுடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். இருவருன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினேன்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையே அமைதிக்கு வழிவகுக்கும். உக்ரைன் விவகாரம் தொடர்பாக எங்கள் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடயிலான நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணும். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...