அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 16 பேர் காயம்

​அமெரிக்காவின் புரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 16 பேர் காயம்
Published on
Updated on
1 min read


அமெரிக்காவின் புரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து அதிகாரிகள் கூறுகையில், "துப்பாக்குச்சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர். 16 பேர் தாக்குதல் காரணமாக மற்ற வகைகளில் காயமடைந்துள்ளனர்" என்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல் துறையினர் இன்னும் தேடி வருகின்றனர்.

சட்ட அமலாக்கத் துறை வட்டாரங்கள் துப்பாக்கிச்சூடு பற்றி கூறுகையில், "துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய உடை மற்றும் முகக் கவசம் அணிந்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு புகையெழுப்பக்கூடிய கருவியை அவர் பயன்படுத்தியிருக்கிறார்" என்றனர்.

நியூயார்க் நகர காவல் ஆணையர் கூறுகையில், "ரயில் நிலையத்தில் தற்போது எந்தவொரு வெடிபொருள்களும் இல்லை. தற்போதைய சூழலில் இது பயங்கரவாத செயலாக விசாரிக்கப்படவில்லை. உயிருக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய அளவுக்கு எவருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com