ஜூலியன் அசாஞ்சாவை அமெரிக்க அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் அதிகாரபூா்வ ஆணை

லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அதிகாரபூா்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.
ஜூலியன் அசாஞ்சாவை அமெரிக்க அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் அதிகாரபூா்வ ஆணை

லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அதிகாரபூா்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிபதி இந்த உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா். அதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான நடைமுறை அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க அரசின் ரகசியங்களை வேவுபாா்த்து, தனது வலைதளத்தில் வெளியிட்டதாக அசாஞ்சே மீது அந்த நாட்டில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு பிரிட்டன் வந்த அவரை பாலியல் வழக்கு ஒன்றில் அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் 2012-ஆம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே, ஈக்வடாா் தூதரகத்தில் தஞ்சமடைந்தாா்.

எனினும், அவருக்கு அடைக்கலம் அளித்திருந்த ஈக்வடாா் தூதரகம் அவரை 2019-ஆம் ஆண்டு தூதரகத்திலிருந்து வெளியேற்றியது. அதையடுத்து, 2012-ஆம் ஆண்டு ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டன் போலீஸாா் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், அசாஞ்சேவை தங்கள் நாட்டுக்கு நாடுகடத்த வேண்டுமென்று அமெரிக்கா சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை லண்டன் கீழமை நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி ஜனவரியில் தள்ளுபடி செய்தது. எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீா்ப்பை டிசம்பா் மாதம் தள்ளுபடி செய்து, அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதி அளித்தது.

அந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையிடு செய்ய பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனனும், அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

அதன் தொடா்ச்சியாக, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான அதிகாரபூா்வ ஆணையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவுக்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால், அசாஞ்சேவை அமெரிக்கா அனுப்படுவாா்.

எனினும், அதனைத் தவிா்ப்பதற்காக நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் சட்ட உரிமை அசாஞ்சேவுக்கு இன்னும் இருப்பதாக வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com