ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அமெரிக்காவுக்குச் செல்ல 8 லட்சம் பேருக்கு விசா: தூதரக அதிகாரி தகவல்

நடப்பு ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 8 லட்சம் பேருக்கு விசா வழங்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 6:25 am

DIN

நடப்பு ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 8 லட்சம் பேருக்கு விசா வழங்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் ஹெச் ஹெஃப்ளின் கூறியதாவது: 

அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் 8 லட்சம் பேருக்கு விசா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல ஸ்லாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'ஹெச்' மற்றும் 'எல்' விசா வழங்கவும் ஆலோசித்து வருகிறோம். 

கரோனாவுக்கு முந்தைய ஆண்டு இங்கு 12 லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2023 அல்லது 2024க்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற நிலைக்கு மாறும் என்று எதிர்பார்க்கிறோம். 

ஐ.டி. நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்கு தேதி ஒதுக்கப்படும். மாணவர்களுக்கு மே 2 ஆவது வாரத்தில் விசா நேர்காணல் நடத்தப்படும். 

கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விசா வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் புதிதாக ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற அலுவலகங்களிலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவசரத் தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, அமெரிக்கா செல்ல விரும்புவோர் செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும். பொய்களைக் கூறி விரைந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.