சிப்ஸ் திருடியதாகக் கூறி 8 வயது கறுப்பின சிறுவனை கைது செய்த காவல்துறை

அழுது கொண்டிருக்கும் சிறுவனின் கைகள் பின்னே கட்டப்பட்டு காவல்துறையினரின் காரை நோக்கி அவரை அழைத்து செல்வது போன்ற விடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகியுள்ளது.
8 வயது கறுப்பின சிறுவனை கைது செய்த காவல்துறை
8 வயது கறுப்பின சிறுவனை கைது செய்த காவல்துறை

சிப்ஸ் திருடியதாகக் கூறி 8 வயது கறுப்பின சிறுவனை அமெரிக்க காவல்துறை கைது செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறுவனை காவல்துறை செய்யும் விடியோ வெளியாகி வைரலான நிலையில், இதுகுறித்து விசாரித்துவருவதாக நியு யார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

அழுது கொண்டிருக்கும் சிறுவனின் கைகள் பின்னே கட்டப்பட்டு காவல்துறையினரின் ரோந்து காரை நோக்கி அவரை அழைத்து செல்வது போன்று விடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோவை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதில், இரண்டு காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்கின்றனர். 

இதை விடியோவாக எடுப்பவர், காவல்துறையை நோக்கி, "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கீறிர்கள்? என கேள்வி எழுப்புகிறார். சிறுவனை கைகளில் பிடித்து கொண்டபடி பதிலளித்த காவல்துறை அலுவலர், "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என யூகியுங்கள் பார்க்கலாம்" என்றார்.

அப்போது மற்றொரு காவல்துறை அலுவலர், "இந்த குழந்தை திருடியுள்ளது" என்கிறார். "கொலை குற்றம் செய்தவரை போல ஏன் அந்த சிறுவனை நடத்துகிறீர்கள். அந்த சிறுவன் எடுத்த சிற்றுண்டிக்கு நான் பணம் தருகிறேன்" என விடியோ எடுக்கும் நபர் கூறுகிறார். 

இந்த சம்பவம் மனதை பதற வைக்கும்படி உள்ளதாக நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நம்மில் பலர் பெற்றோர்கள். உங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும்
சம்பவம் நிகழ்ந்தபோது அக்குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தை கற்பனை செய்து பாருங்கள்" என்றார்.

அந்த எட்டு வயது சிறுவன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. காவல்துறையினர் இனவாதத்துடன் செயல்பட்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர். அமெரிக்காவில் காவல்துறையினர் இனவாதத்துடன் செயல்படுவது இது முதல்முறை அல்ல. காவல்துறையினரின் வன்முறையால் வெள்ளையின ஆண்கள் பாதிக்கப்படுவதை காட்டிலும் கறுப்பின ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com