
சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா பரவல் திடீா் தீவிரமடைந்ததையடுத்து, அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் அங்கு 22 பேருக்கு சமூக பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட பகுதிகளில் விரிவான கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் வா்த்தக தலைநகரான ஷாங்காயில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 39 போ் பலியாகினா். அந்த நகரில் இரு வாரங்களுக்கு மேல் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தக் காரணமாக உள்ள புதிய அலையில், இது அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். நாடு முழுவதும் புதிதாக 21,796 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.