மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில், மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனயாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு (கோப்பிலிருந்து..)
மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு (கோப்பிலிருந்து..)

கீவ்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில், மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனயாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தி ரேடியோ லிபெர்ட்டி வெளியிட்டிருக்கும் தகவலில், பிளானெட் லேப்ஸ் செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படங்களை, சான் பிரான்ஸிக்கோவை தலைமையகமாகக் கொண்ட புவியியல் புகைப்பட நிறுவனம், மரியுபோலின் ஸ்டார்யி க்ரிம் கிராமத்தில் 200 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய புதைகுழி இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

முதல் புகைப்படம் மார்ச் 24ஆம் தேதி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில், 3 மிகநீண்ட பள்ளங்கள் இருப்பதும், அதில் ஒன்று 60 - 70 மீட்டர் நீளம் கொண்டதாகவும், உக்ரையின்ஸ்கா பிராவ்டா வெளியிட்ட அறிக்கை மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஏப்ரல் 7ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம், அந்த நீண்ட பள்ளமானது பெரிதாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில பகுதிகளில் பள்ளமானது வெகு அண்மையில் தோண்டி மூடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

இறுதியாக, ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம், புதிதாக மிகப்பெரிய புதைகுழி தோண்டப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. இதன் நீளம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்யி க்ரிம் கிராமத்தை மார்ச் 10ஆம் தேதி ரஷிய படைகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com