மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை

ஊழல் குற்றச்சாட்டுகளின் போரில் மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்களகிழமை தீா்ப்பளித்தது.
ஆங் சான் சூகி
ஆங் சான் சூகி
Updated on
1 min read

ஊழல் குற்றச்சாட்டுகளின் போரில் மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்களகிழமை தீா்ப்பளித்தது.

மியான்மா் ஜனநாயக அரசின் முன்னாள் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராக ரகசியமாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கு விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. அதையடுத்து, அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே, மற்ற முறைகேடு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைகளுக்காக வழங்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது, தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது நிலங்களை வாடகைக்கு விட்டது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து அவா்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளில் அவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், ஊழல் வழக்குகளில் ஏற்கெனவே 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு, நீதிமன்றம் தற்போது மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com