
வாட்ஸ்ஆப்பில் அழித்த செய்திகளை மீண்டும் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் உள்ள வாட்ஸ்ஆப் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய நிலையில், அழித்த செய்தியை மீண்டும் திரும்பப் பெற முடியாது.
இதையும் படிக்க | சென்னையில் தொடங்கும் ஜெயிலர் படப்பிடிப்பு?
அதன்படி அழித்த செய்தியை மீண்டும் திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேசமயம் இந்த வசதியை செய்தியை அழித்த ஒரு சில நொடிகளுக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.