ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் திடீர் நிறுத்தம்! 

நிலவுக்கு ஆர்டெமிஸ் விண்கலம் அனுப்புவதில் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியது நாசா.
ஆர்டெமிஸ் விண்கலம்
ஆர்டெமிஸ் விண்கலம்

நிலவுக்கு ஆர்டெமிஸ் விண்கலம் அனுப்புவதில் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியது நாசா.

நிலவுக்கு முதன்முறையாக விண்வெளிக்கு மீண்டும் வீரர்களை அனுப்ப நாசா முடிவெடுத்திருந்தது. இதில் முதல்முறையாக விண்வெளி வீராங்கனையை அனுப்ப நாசா முடிவெடுத்திருந்தது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. ஐந்த திட்டம் 'அப்பல்லோ' என்றழைக்கப்பட்டது.  2019 ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது. 

மிகவும் சக்தி வாய்ந்த பிரமாண்ட இந்த ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது. எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தியது நாசா.

எங்களது குழுக்கள் தொடர்ந்து தரவைச் சேகரிக்கும், மேலும் அடுத்த வெளியீட்டு முயற்சியின் நேரத்தை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம் என நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com