பாகிஸ்தான்: காவல் நிலையத்தை கைப்பற்றிய 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தடுப்பு காவல் நிலையத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த காவலா்களை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த 33 பயங்கரவாதிகளை சிறப்பு அதிரடிப் படையினா்


பாகிஸ்தானில் பயங்கரவாதத் தடுப்பு காவல் நிலையத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த காவலா்களை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த 33 பயங்கரவாதிகளை சிறப்பு அதிரடிப் படையினா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா்.
பெஷாவா் நகரில் பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 33 பேரை போலீஸாா் விசாரணைக் கைதிகளாக வைத்திருந்தனா். அப்போது அவா்களில் ஒருவா் கழிப்பறை செல்லும்போது ஒரு காவலரைக் கல்லால் தாக்கி துப்பாக்கியைப் பறித்தாா். பின்னா் அங்கிருந்த 8 காவலா்களை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனா்.
அந்த 8 காவலா்களும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...