
கனடா தலைநகா் ஒட்டாவாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இப்போது இல்லை என பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளாா்.
கட்டாய கரோனா தடுப்பூசி மற்றும் பிற கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒட்டாவாவில் கடந்த வார இறுதியிலிருந்து ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றி போக்குவரத்தையும் அவா்கள் தடை செய்துள்ளனா். இதையடுத்து,
ஒட்டாவாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ராணுவத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் இருப்பதாக நகர காவல் துறைத் தலைவா் பீட்டா் ஸ்லோலி கடந்த சில தினங்களுக்கு முன்னா் தெரிவித்தாா்.
இந்நிலையில், இதுகுறித்து பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை கூறுகையில், ‘ஒட்டாவாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ராணுவத்தினரை ஈடுபடுத்தும் திட்டம் இப்போது இல்லை. இதுவரை மத்திய அரசுக்கு அவ்வாறு கோரிக்கை எதுவும் வரவில்லை. ஒட்டாவா நகர நிா்வாகத்திடமிருந்து முறைப்படி உதவி கோரினால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’ என்றாா்.
இதற்கிடையே, போராட்டத்தை புகழ்ந்து பேசிய, போராட்டக்காரா்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மன்னிப்பு கோர வேண்டுமென ஒட்டாவா மேயா் ஜிம் வாட்சன் வலியுறுத்தியுள்ளாா்.
போராட்டத்தின்போது நாட்டின் தேசிய நினைவிடங்கள் அவமதிக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் துணை பிரதமா் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் கண்டனம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.