உக்ரைனில் செர்னோபிலைக் கைப்பற்றியது ரஷியா: 13 பொதுமக்கள், 9 வீரர்கள் பலி

உக்ரைனில் செர்னோபிலைக் கைப்பற்றியது ரஷியா: 13 பொதுமக்கள், 9 வீரர்கள் பலி

உக்ரைன் நாட்டில் செர்னோபிலை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அப்பகுதியில் இருந்த அணு உலையையும் கைப்பற்றியது. 

உக்ரைன் நாட்டில் செர்னோபிலை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அப்பகுதியில் இருந்த அணு உலையையும் கைப்பற்றியது. 

தெற்கு உக்ரைனில் 13 பொதுமக்கள், 9 ராணுவ வீரர்களையும் ரஷிய ராணுவம் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். எனினும் உக்ரைனில் ரஷிய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இருநாட்டின் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனைத்  தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டை எழுப்பியது.

இந்நிலையில், இன்று காலை போர்த்தொடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைன் வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கிவ்விற்குள் நுழைந்துள்ள ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com