பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரபு அமீரகம்: விபத்தில் சிக்கிய இரு இந்தியர்களுக்கு ரூ. 2.23 கோடி இழப்பீடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கிய இரண்டு இந்திய தொழிலாளிகளுக்கு ரூ. 2.23 கோடி இழப்பீடு தொகையை காப்பீட்டுத் தீர்வுக் குழு வழங்கியுள்ளது.

News image
விபத்தில் சிக்கிய இரு இந்தியர்களுக்கு ரூ. 2.23 கோடி இழப்பீடு
Updated On :4 ஜனவரி 2022, 9:29 am

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கிய இரண்டு இந்திய தொழிலாளிகளுக்கு ரூ. 2.23 கோடி இழப்பீடு தொகையை காப்பீட்டுத் தீர்வுக் குழு வழங்கியுள்ளது.

ஷார்ஜா மற்றும் துபையில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளிகளான சாஜில் மற்றும் முகமது ஷரீஃப் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்களுக்கான காப்பீட்டுத் தொகை, தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் உள்ள மார்கெட்டில் பணிபுரிந்து வந்த சாஜில், கடந்த 2020, ஜன 20ஆம் தேதி தான் வேலை செய்யும் இடத்திற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது வேன் ஒன்று அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த சாஜில், சுமார் 6 மாத சிகிச்சைக்கு பிறகு பணிக்கு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு விபத்து இழப்பீடாக வட்டியுடன் ரூ. 1,03,38,503 வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், கேரளத்தை சேர்ந்த முகமது கடந்த 2020 மார்ச் 31ஆம் தேதி நண்பருடன் பணிபுரியும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவர்மீது வாகனம் மோதியுள்ளது. இதில், தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயமடைந்த முகமது நாடு திரும்பினார்.

இந்நிலையில், இடது கண் பார்வையை இழந்த முகமதுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 1,21,72,062 மற்றும் அதற்கான 9 சதவீத வட்டி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.