லாகூர் குண்டுவெடிப்பில் மூவர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

"முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த நேரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமே குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது"
லாகூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்
லாகூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்

பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடித்ததில் மூவர் பலியாகினர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து லாகூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிஃப் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த நேரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமே குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது" என்றார்.

லாகூரின் பிரபல அனார்கலி சந்தை அருகேதான் இந்திய பொருள்கள் விற்கப்படும். இங்கு குண்டுவெடித்ததால் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.

இதற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறி நிலையை சந்தித்ததிலிருந்து, காவல்துறையை குறிவைக்கும் விதமாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.

இந்த பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, ஆப்கன் தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருக்கும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தது.

இதுகுறித்து காவல்துறை துணை இயக்குநர் முகமது அப்யாத், "குண்டுவெடிப்பின் தன்மையை ஆராய்ந்து வருகிறோம். இந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்பின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com