அட இப்படியும் காரை பார்க் செய்யலாமா? வைரலாகும் விடியோ

பல விடியோக்கள் எந்த முகவரியும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அது வைரலாகிவிடுவதும் உண்டு.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
1 min read


பல விடியோக்கள் எந்த முகவரியும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அது வைரலாகிவிடுவதும் உண்டு.

அந்த வகையில்தான், ஒரு கார் பார்க்கிங் விபத்துக் காட்சி  அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்த விவரங்களும் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது.

ஏராளமானோர் அந்த கார் விபத்தைப் பார்த்து, அதனை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து வருவதால், ஏராளமானோரால் பார்க்கப்பட்ட விடியோக்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது.

அப்படி என்ன இருக்கிறது அந்த விடியோவில் என்று கேட்டால், பெரிதாக எதுவும் இல்லை. ஒரு சாலையோரம், அடுத்தடுத்து நான்கு கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. அந்த சாலையில் அதிக வேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல், வந்த வேகத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்த கார்கள் மீது மோதுகிறது.

கார் வந்த வேகத்தால், அந்த கார் மீது மோதியும் நிற்க முடியாமல், அடுத்தடுத்த கார்கள் மீது ஏறி, ஒரு டைவ் அடித்து, கடைசியாக நின்று கொண்டிருந்த காருக்கு இடையே மிகக் கச்சிதமாக இருந்த ஒரு இடத்தில் சென்று பார்க் ஆனது. அவ்வளவுதான். பறந்து வந்து பார்க் ஆன அந்த காரிலிருந்து, கார் ஓட்டுநர் மிக மெதுவாக (வந்த வேகம் அப்படி) வெளியே இறங்கி, பாருங்க எவ்வளவு எளிதாக பார்க்கிங் செய்தாகவிட்டது என்பது போல பார்ப்பவர்களின் கண்களை விரிய வைக்கும்படி வெளியே நடந்து வருகிறார்.

பார்க்கிங் எளிதாக நடந்துவிட்டது. என்ன காருக்கு மட்டும் லேசான சேதாரம் அவ்வளவுதான். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்றால் இது ஒரு சூப்பர் ஐடியாதான்.. தயவுகூர்ந்து யாரும் முயற்சித்துப் பார்த்துவிட வேண்டாம். சேதாரம் நமக்கும்தான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com