கேள்விகேட்ட செய்தியாளரை திட்டிய  அமெரிக்க அதிபர்; வெடித்தது சர்ச்சை

பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க செய்தி ஊடகத்தில் பணியாற்றும் செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடன்
ஜோ பைடன்


வாஷிங்டன்: பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க செய்தி ஊடகத்தில் பணியாற்றும் செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் செய்தியாளர்  பீட்டர் டூசி கேள்வி கேட்டதற்கு, ஜோ பைடன் அவர் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

"இது மிகப்பெரிய சொத்து, மேலும் பணவீக்கம்?" என்று கூறியவாறு, செய்தியாளரை தகாத வார்த்தைகளால் கோபமாகத் திட்டினார்.

தனது இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த மைக் அணைத்துவைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்து ஜோ பைடன் திட்டிய நிலையில் மைக் செயல்பாட்டில் இருந்ததால், அவர் பேசியது அனைவருக்கும் கேட்டது.

இவை அனைத்துமே அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஜோ பைடன் குறித்து வெளியான சர்ச்சைகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பின்போது "முதல் அடியை ரஷ்ய அதிபர் எடுத்து வைக்க வேண்டும் என்று ஏன் காத்திருக்க வேண்டும்?" என இதே ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் கேட்டதற்கு, "என்ன ஒரு முட்டாள்தனமான கேள்வி?" என்று ஜோ பைடன் கேட்டது  சர்ச்சையைக் கிளப்பியதும் நினைவிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com