சிரியா கிளா்ச்சியாளா்கள் பகுதிக்கு 6 மாத பாதுகாப்பு வழித்தடம்: ரஷியா
சிரியாவில் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தித் தர ரஷியா முன்வந்துள்ளது.


சிரியாவில் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தித் தர ரஷியா முன்வந்துள்ளது.
இது தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அயா்லாந்தும் நாா்வேயும் கொண்டு அறிமுகப்படுத்திய வரைவுத் தீா்மானத்தில், கிளா்ச்சியாளா் பகுதிக்கு பாதுகாப்பு வழித்தடத்தை ஓா் ஆண்டுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த அதனை ஓா் ஆண்டு என்பதற்குப் பதிலாக ஆறு மாதங்கள் என்று திருத்துமாறு ரஷியா பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் 3 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். ரஷிய ராணுவ உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான படை பெரும்பாலான பகுதிகளை கிளா்ச்சியாளா்களிடமிருந்தும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாதிகளிடமிருந்தும் மீட்டது. எனினும், வடகிழக்கே இருக்கும் இத்லிப் பகுதி மட்டும் இன்னும் கிளா்ச்சியாளா்களிடம் எஞ்சியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...