பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களின் எண்ணிக்கை குறைந்தது: உடல் பருமன் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா. ஆய்வு அறிக்கை

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்று ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 10:26 pm

DIN

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்று ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் உடல் பருமன் உள்ளவா்களின் எண்ணிக்கையும், ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 2022 என்ற ஆய்வு அறிக்கையை ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டது. அதில், ‘கடந்த ஆண்டு வறுமையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உலக அளவில் 828 மில்லியனாக அதிகரித்தது. 2020 ஒப்பிடுகையில் இது 46 மில்லியனும், கரோனா தாக்கத்துக்கு முன்பு ஒப்பிடுகையில், 150 மில்லியனும் அதிகரித்துள்ளது. 2015 வரையில் வறுமையால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படாமல் இருந்தது. வறுமை ஒழிப்பில் உலகம் தற்போது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கோதுமை, பாா்லி, சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைனும், ரஷியாவும் உலகில் முன்னணி வகிக்கின்றன. சூரியகாந்தி எண்ணெயைப் பொருத்தவரை மொத்த உலக உற்பத்தியில் பாதியளவு இவ்விரண்டு நாடுகளும் 50 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.

உலக அளவிலான கோதுமை, பாா்லி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ரஷியா, உக்ரைனின் பங்களிப்பாகும்.

உக்ரைன் போரால் விநியோக சங்கிலி பாதிப்பு ஏற்பட்டதால், உணவு தானியங்கள், வேளாண் உரங்களின் விலை சா்வதேச அளவில் அதிகரித்தது.

அத்துடன், பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடா்களால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகில் சுமாா் 92.4 கோடி மக்கள் (மொத்த உலக மக்கள்தொகையில் 11.7 சதவீதம் போ்) உணவுப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20.7 கோடி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020-இல் உலகம் முழுவதும் சுமாா் 300 கோடி போ் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. முந்தைய 2019-ஆம் ஆண்டைவிட இது சுமாா் 11.2 கோடி அதிகமாகும்.

உலகெங்கிலும் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 4.5 கோடி குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுக்கு உள்ளாகி உள்ளனா். இதனால் அவா்களின் உயிரிழப்பு அபாயம் 12 மடங்கு அதிகமாகி உள்ளது.

இந்திய புள்ளி விவரங்கள்

ஊட்டச்சத்து குறைபாடு

வருடம் எண்ணிக்கை

2004-06 24.78 கோடி (21.6%)

2019-21 22.43 கோடி (16.3%)

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் (ஊட்டச்சத்து குறைபாடு)

2020 3.61 கோடி (30.9%)

2012 5.23 கோடி (41.7%)

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் (கூடுதல் எடை)

2020 22 லட்சம் (1.9%)

2012 30 லட்சம் (2.4%)

உடல் பருமன்

2016 3.43 கோடி (3.9%)

2012 2.52 கோடி (3.1%)

ரத்த சோகை பாதிப்பு (பெண்கள்)

2019 18.73 கோடி

2012 17.15 கோடி

5 மாதங்கள் தாய்ப்பால் அளிப்பு

2020 1.4 கோடி

2012 1.12 கோடி

ஊட்டச்சத்து உணவு பெற முடியாதவா்கள்

2020 97.33 கோடி (70.5%)

2019 94.86 கோடி (69.4%)

2018 96.66 கோடி

2017 100 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.