‘ஈரான் ஒப்பந்தத்துக்காக காத்திருக்க முடியாது’

வல்லரசு நாடுகளுடன் தாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஈரான் மீண்டும் திரும்பி வருவதற்காக நிரந்தரமாகக் காத்திருக்க முடியாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
‘ஈரான் ஒப்பந்தத்துக்காக காத்திருக்க முடியாது’

வல்லரசு நாடுகளுடன் தாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஈரான் மீண்டும் திரும்பி வருவதற்காக நிரந்தரமாகக் காத்திருக்க முடியாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா், ஜெருசலேமில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறித்து இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீடுடன் விவாதித்தேன். வல்லரசு நாடுகளுடன் அந்த நாடு செய்துகொண்டுள்ள அணுசக்தி திட்ட நிபந்தனைகளை அந்த நாடு மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈரான் அதனை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காாவால் நிரந்தரமாகக் காத்திருக்க முடியாது என்றாா் ஜோ பைடன்.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும் அதற்கு பதிலாக அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையொப்பமானது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தாா். அதையடுத்து, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் மீறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com