இலங்கை ராணுவத்தினர் கவச வாகனத்தில் ரோந்து

இலங்கை தலைநகர் கொழும்பில் ராணுவ வீரர்கள் கவச வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை ராணுவத்தினர் கவச வாகனத்தில் ரோந்து
Published on
Updated on
1 min read

இலங்கை தலைநகர் கொழும்பில் ராணுவ வீரர்கள் கவச வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள், அதிபர் மற்றும் பிரதமரின் அலுவலகங்களை முற்றுக்கையிட்டு கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த நிலையில், இன்று கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்களை கைப்பற்றியுள்ளவர்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை மீட்டெடுக்க ராணுவத்தினருக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தலைநகர் கொழும்பில் கவச வாகனத்தில் நின்றபடி ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com