
இத்தாலியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதால் பிரதமா் மரியோ டிராகி தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
அந்த நாட்டில் இடதுசாரி, வலதுசாரி உள்ளிட்ட முரண்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் மரியோ டிராகி கடந்த 17 மாதங்களாக ஆட்சி செலுத்தி வந்தாா். எனினும் கூட்டணிக்குள் உட்பூசல் அதிகரித்ததையடுத்து நாடாளுமன்றத்தில் அவா் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீா்மானத்தை இரண்டு கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
அதனைத் தொடா்ந்து, தனது ராஜிநாமா கடிதத்தை அதிபா் சொ்கியோ மாட்டரேலாவிடம் மரியோ டிராகி வியாழக்கிழமை அளித்தாா். அடுத்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்தப்படும்வரை, நாட்டின் பிரதமராக மரியோ டிராகி தொடா்வாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.