காங்கோ வன்முறை: இந்திய ராணுவத்தினர் இருவர் கொலை

காங்கோ நாட்டில் ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர்.
ஷிஷூபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய்
ஷிஷூபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய்

காங்கோ நாட்டில் ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) கிளர்ச்சிப் படைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வன்முறைக் கலவரங்களும் அரசிற்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.

மேலும், காங்கோவில் நடைபெறும் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஐ.நா கடந்த 10 ஆண்டுகளாக அமைதிப்படையை அங்கு நிறுத்தியுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் அங்கம் வகிப்பர். இருப்பினும், அப்படையினர் வன்முறையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அந்நாட்டின் வடக்கு கீவ் மாகாணத்தின்  கோமா, பேனி நகரங்களில் உள்ள ஐநா அமைதிப்படைக்கு முகாம்கள் மீது பொதுமக்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஷிஷூபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷ்னோய் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். மேலும், அமைதிப்படையினர் 15 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பின், காங்கோ ராணுவத்தினரால் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

அமைதிப்படை மீதான இத்தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com