
நடப்பாண்டின் முதல் காலாண்டில் 44 லட்சம் சேனல்களை தளத்திலிருந்து நீக்கியுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது.
யூடியூப்பில் நிறைந்துள்ள கோடிக்கணக்கான சேனல்களையும் அதில் பதிவிடப்பட்டிருக்கும் விடியோக்களையும் யூடியூப் தணிக்கைக் குழு கவனித்து வருகிறது.
இதன் காரணமாக, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற வன்முறைகள் அதிகம் நிறைந்த விடியோக்களும், சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பதிவிடும் விடியோக்களும் உடனடியாக நீக்கப்படுகிறது.
அதிகபட்சமாக இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதம் வரை இந்தியாவில் 11 லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தாண்டின் நடப்பு காலாண்டில் ஏப்ரல் மாதம் வரை வன்முறை, நிர்வாணக் காட்சிகள் அதிகம் கொண்ட மற்றும் யூடியூப் வழிகாட்டுதல்களை மீறிய 44 லட்சம் சேனல்களை தளத்திலிருந்து நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.