
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை தனது அத்தியாவசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “ இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டும் போதாது. அதனை பழைய நிலைக்கு வலிமையாக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட் தயாராகி வருகிறது. கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள்,மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.