முஷாரஃப் உடல்நிலை மோசமாக உள்ளது: குடும்பத்தினர்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (78) உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (78) உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்தே குடும்பத்தினர் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளனர்.

ட்விட்டர் பதிவில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது:

"அவர் (முஷாரஃப்) வென்டிலேட்டரில் இல்லை. நோயினால் அவதிப்பட்டு வரும் அவர் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடினமான நிலையை எதிர்கொண்டு வருகிறார். இதிலிருந்து மீண்டு வருவதற்கு சாத்தியமில்லை. உறுப்புகள் செயலிழக்கின்றன. அவர் அன்றாட வாழ்வை பிரச்னையின்றி கடப்பதற்கு பிரார்த்தனை செய்யுங்கள்."

அவர் கடந்த 1999 முதல் 2008 வரை பாகிஸ்தானை ஆட்சி புரிந்தார். 2007-இல் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி அவசர நிலையை அமல்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், மருத்துவச் சிகிச்சைக்காக கடந்த 2016-இல் துபை சென்ற முஷாரஃப், அதன்பிறகு பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com