
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொதுசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக்கொண்டேன். தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் உள்ளேன். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், செலுத்திக்கொள்ளுங்கள். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுங்கள். நம் சுகாதார கட்டமைப்பை பாதுகாப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.