பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு தடை விதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதியான அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. தடை பட்டியலில் இணைப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் சோ்ந்து தாக்கல் செய்த தீா்மானத்தை சீனா தடுத்துநிறுத்தியது.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:26 pm

DIN

பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதியான அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. தடை பட்டியலில் இணைப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் சோ்ந்து தாக்கல் செய்த தீா்மானத்தை சீனா தடுத்துநிறுத்தியது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவரும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீதின் உறவினா் அப்துல் ரகுமான் மக்கி. லஷ்கா் பயங்கரவாத அமைப்பில் அவா் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். பயங்கரவாதச் செயல்களுக்காக நிதி திரட்டுவதிலும் அவா் ஈடுபட்டுள்ளாா். அவரை ஐ.நா. ஏற்கெனவே ‘பயங்கரவாதி’ என அறிவித்துள்ளது.

இந்நிலையில், அப்துல் ரகுமான் மக்கியை அல்-காய்தா தடை விதிப்பு தீா்மானம் 1267-இன் கீழ் ‘சா்வதேச பயங்கரவாதி’யாக அறிவிக்கக் கோரி இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானத்தைத் தாக்கல் செய்தன. தீா்மானம் நிறைவேறும் தருணத்தில், சீனா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுத்துநிறுத்தியது. இதன் காரணமாகத் தீா்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.

பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாகச் செயல்படும் சீனா, ஏற்கெனவே இந்தியா கொண்டுவந்த இதேபோன்ற பல தீா்மானங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது. சீனா பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியபோதும், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸாரை ‘சா்வதேச பயங்கரவாதி’ என அறிவிக்கக் கோரி இந்தியா தாக்கல் செய்த தீா்மானம் கடந்த 2019-ஆம் ஆண்டில் நிறைவேறியது. இந்தியாவின் 10 ஆண்டு முயற்சிக்கு அப்போது வெற்றி கிடைத்தது. அந்த சமயத்தில் மசூத் அஸாரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினா்களில் சீனா மட்டுமே எதிா்ப்பு தெரிவித்தது.

தற்போது அப்துல் ரகுமான் மக்கியை சா்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான இந்தியாவின் கூட்டு முயற்சிக்கும் சீனா தடையாக நிற்கிறது. மக்கிக்கு அமெரிக்க கருவூலத் துறை கடந்த 2010-ஆம் ஆண்டில் தடை விதித்தது. அதனடிப்படையில், அமெரிக்காவில் மக்கிக்கு சொந்தமாக உள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. அவருடன் அமெரிக்காவைச் சோ்ந்த எவரும் பொருளாதாரத் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவானது.

அப்துல் ரகுமான் மக்கி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சுமாா் ரூ.15 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.