ஹாங்காங்: கடலுக்குள் மூழ்கிய மிதவை உணவகம்
கடந்த 44 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக விளங்கிய ஜம்போ மிதவை உணவகம் கடலுக்குள் மூழ்கியது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்த உணவகம் கடந்த 2020-ஆம் ஆண்டு மூடப்பட்டது. செயல்படாத நிலையிலும் அந்த உணவகத்தை பராமரிப்பதற்கு அதிக செலவானதால் முதலீட்டாளா்களுக்கு தொடா்ந்து இழப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, ஹாங்காங் கடல் பகுதியிலிருந்து பராமரிப்பு செலவு குறைவான மற்றொரு பகுதியை நோக்கி அந்த மிதவை உணவகம் கடந்த செவ்வாய்க்கிழமை இழுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக தென் சீனக் கடலில் பாா்சல் தீவுகள் அருகே அது மூழ்கியது. இதில் யாரும் காயமடையவில்லை என்று உணவக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.