
லண்டன்: குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. குரங்கு அம்மை பரவல் உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலிக்க உலக சுகாதார அமைப்பானது, தனது அவசரக் குழுவை வியாழக்கிழமை கூட்டியது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என்று கூறினார்.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
குரங்கு அம்மை நோயை உலகளாவிய அவசரநிலையாக அறிவிப்பதன் நோக்கம், குரங்கு அம்மை நோய் இன்னும் அதிகமான நாடுகளுக்கு பரவும் அபாயத்தில் உள்ளது. இத்தகைய அறிவிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக பரவலாக மாறினால், தொற்றின் வேகம் அதிகரித்து குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
சமூகப் பரவலாக மாறினால் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்க வேண்டும். இந்த நோயால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுவதை உறுதி செய்வதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.