மகனுடன் சத்ய நாதெள்ளா
மகனுடன் சத்ய நாதெள்ளா

மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளாவின் மகன் உயிரிழப்பு

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியர் சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார்.
Published on

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இந்தியர் சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா உயிரிழந்தார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த சத்ய நாதெல்லா உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக பணி உயர்வு செய்யப்பட்டார்.

பில்கேட்ஸின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்டில் இந்தியர் மிகப்பெரிய பதவிக்கு தேர்வானது பெரிதும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், பெருமூளைவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சத்ய நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா(26) உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து இன்று உயிரிழந்தார்.

சத்ய நதெள்ளாவிற்கு திவ்யா நாதெள்ளா மற்றும் தாரா நாதெள்ளா என்கிற 2 மகள்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com