ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்வாங்க இந்தியாவுக்குத் தடையில்லை
ரஷியாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தங்களது பொருளாதாரத் தடைகள் தடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


ரஷியாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தங்களது பொருளாதாரத் தடைகள் தடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கூறியதாவது:
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
எனினும், சலுகை விலையில் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, எங்களது பொருளாதாரத் தடைக்கு எதிரானது இல்லை.
இருந்தாலும், வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும். ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு ஆதரவளிப்பது, மிக மோசமான பின்விளைவுகளை உண்டாக்குவதற்கு ஆதரவு தருவதாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...