
2021-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலாந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கரோனா காரணமாக ’மிஸ் வேர்ல்ட்’ போட்டியாளர்கள் சிலருக்கு தொற்று உறுதியானதால் கடந்த ஆண்டு போட்டிகள் நடைபெறமால் இருந்தது.
இந்நிலையில், தொற்று பரவல்கள் குறைந்த நிலையில் தள்ளிப்போன 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி போர்டோ ரிகோவில் நடந்து முடிந்துள்ளது.
இதில் போலாந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் இடம் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாளி ஸ்ரீ சைனிக்கும், மூன்றாவது இடம் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த ஒலிவியா யாஸுக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.