
வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று (மார்ச்-17) இஸ்கானின் ராதாகண்டா கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் இருந்த 2 பக்தர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்திய எல்லையையொட்டிய வங்கதேசத்தின் லால்மனிா்ஹத் மாவட்டத்திலுள்ள 3 கோயில்களின் கதவுகளில் மா்ம நபா்கள் மாட்டுக் கறியை பாலிதீன் உறைகளில் கட்டி தொங்கவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.