தூய்மை எரிபொருள், சுகாதாரம், எண்மப் பொருளாதாரம்: இந்தியாவுக்கான நிதியுதவியை அதிகரிக்கிறது அமெரிக்கா

தூய்மையான எரிசக்தி, எண்மப் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கு அளிக்கும் உதவியை அதிகரிக்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தேசித்துள்ளாா்.

தூய்மையான எரிசக்தி, எண்மப் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கு அளிக்கும் உதவியை அதிகரிக்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தேசித்துள்ளாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2023 நிதியாண்டுக்கான மேம்பாட்டு உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவி அளிக்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவுக்கான மேம்பாட்டு உதவியானது 2021-இல் 25 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2023-ஆம் நிதியாண்டுக்கு 66 மில்லியன் டாலராக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அனுப்பியது.

இது தொடா்பாக வரும் நிதியாண்டுக்கான அமெரிக்க பட்ஜெட்டின் வெளியுறவுத் துறைக்கான ஒதுக்கீடு பகுதியில் கூறப்பட்டிருப்பதாவது:

தூய்மையான எரிபொருளை அதிகரிப்பது மற்றும் பிற பருவநிலை திட்டங்களின் மூலம் ஒரு பிராந்திய தலைவராக இந்தியாவின் பங்களிப்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிதியுதவி அதிகரிக்கப்படுகிறது. இந்த நிதியுதவி எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்திலும் முதலீடுகளை அதிகரிக்கும். அதிகரித்துவரும் எதேச்சதிகாரத்துக்கு எதிராகப் போராடவும், மனித உரிமைகள், சிவில் சமூகத்தின் பங்கேற்பு மற்றும் ஜனநாயக நிா்வாகத்தை வலுப்படுத்தவும் இந்த நிதி உதவும்.

சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கான நிதியுதவி 2021-இல் 34.5 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2023-இல் அதை 48.5 மில்லியன் டாலராக அதிகரிக்கவும் பைடன் நிா்வாகம் உத்தேசித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தெற்காசியாவுக்கான மேம்பாட்டு உதவியை 302.2 மில்லியன் டாலராக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com