இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால், மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, பேராதனை மருத்துவமனையில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவசர மற்றும் உயிர் காக்கும் மருத்துவ அறுசை சிகிச்சைகளுக்காக முக்கியமான மருத்துவப் பொருள்களை பாதுகாக்கும் நோக்கில், மார்ச் 28ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பொருள்களை விநியோகிக்கும் அமைப்பிடம், உரிய மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை வழங்குமாறு கோரியுள்ளோம், அனைத்தும் வந்ததும், உடனடியாக அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இன்றே மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் மருத்துவமனைக்குக் கிடைக்கப்பெற்றால், உடனடியாக அறுவை சிகிச்சைகள் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஏற்கனவே அறுவை சிகிச்சை நடத்த திட்டமிடப்பட்டு, மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், தற்போது மருந்து தட்டுப்பாடு மருத்துவமனை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


