உக்ரைனுக்கு திடீர் பயணம்; குழந்தைகள், தன்னார்வலர்களை சந்தித்த அஞ்சலின ஜூலி

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சிறப்பு தூதராக உள்ள அஞ்சலின ஜூலி, போர் நடைபெற்றுவரும் உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
அஞ்சலின ஜூலி
அஞ்சலின ஜூலி
Published on
Updated on
1 min read

உக்ரைனிய நகரமான கிவ்வுக்கு ஹாலிவுட் நடிகையான அஞ்சலின ஜூலி பயணம் மேற்கொண்டுள்ளார். ரயில்வே நிலையம், பேக்கரிக்கு சென்ற அவர் ரஷிய போரால் இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.

ரயில்வே நிலையத்தில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்துவரும் தன்னார்வலர்களுடனும் அவர் கலந்துரையாடினார். அப்போது, நாள் ஒன்றுக்கு 15 பேருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிவருவதாக அஞ்சலின ஜூலியிடம் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

ரயில்வே நிலையத்தில் உள்ள பெரும்பான்மையானோர் 2 லிருந்து 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும் தன்னார்வலர்கள் கூறினர்.

இதற்கு பதிலளிக்கும் விமதாக பேசிய ஜூலி, "அவர்கள் அதிர்ச்சியில் இருக்க வேண்டும். குழந்தைகளை அதிர்ச்சி எவ்வாறு பாதிக்கிறது என்பதை நான் அறிவேன். அவர்கள் எவ்வளவு முக்கியம், நாம் அந்த குழந்தைகளுடம் இருப்பதும் கொடுக்கப்படும் அரவணைப்பும் எவ்வளவு முக்கியம், அவர்களின் குரல்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் அறிவேன்" என்றார்.

சிவப்பு நிற உடை அணிந்த சிறுமிக்கு ஜூலி சிரிப்பு மூட்டியது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது. பின்னர், குழந்தைகளுடனும் தன்னார்வலர்களுடனும் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களில், 12.7 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைனிய மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தகவல் தெரிவித்துள்ளது. இது போருக்கு முந்தை உக்ரைனிய மக்கள் தொகையில் 30 சதவிகிதமாகும். 46 வயதான அஞ்சலின ஜூலி, ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சிறப்பு தூதராக உள்ளார்.

உள்நாட்டு போர் நடைபெற்றுவரும் ஏமனுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சிறப்பு தூதரான அஞ்சலின கடந்த மாதம் சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com