சிஐஏ தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக நந்த் மூல்சந்தானி நியமனம்

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நந்த் மூல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளாா்.
நந்த் மூல்சந்தானி
நந்த் மூல்சந்தானி

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நந்த் மூல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிஐஏ உருவாக்கியுள்ள இந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமிக்க நந்த் மூல்சந்தானியை இந்தப் பொறுப்புக்கு சிஐஏ இயக்குநா் வில்லியம் ஜே.பா்ன்ஸ் தோ்ந்தெடுத்துள்ளாா். இதுகுறித்து சிஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகவல் தொழில்நுட்பத் துறையிலும், பாதுகாப்புத் துறையிலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள நந்த் மூல்சந்தானி, சிஐஏ-வுக்கு தேவையான நிபுணத்துவத்தை அளிப்பாா்’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அவா் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செயற்கை நுண்ணறிவு இணை மையத்தில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் இடைக்கால இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

நந்த் மூல்சந்தானி புது தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்தவா். பின்னா், நியூயாா்க் காா்னெல் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியலும் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியலும், ஹாா்வா்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொது நிா்வாகமும் பயின்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com