கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முயன்றபோது விபரீதம்; இந்தியரின் நிலை என்ன?

கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முயன்ற இந்தியர் சிகரத்தின் உச்சிக்கு அருகே 8,200 மீட்டர் உயரத்திற்கு சென்றபோது உயிரிழந்தார்.
கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முயன்ற இந்தியர்
கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முயன்ற இந்தியர்

உலகின் மூன்றாவது உயரமான சிகரத்தை ஏற முயன்ற இந்தியர் நேபாளம் அருகே உயிரிழந்தார். கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏற முற்படுகையில், 8,200 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது நாராயண ஐயர் என்ற இந்தியர் உயரிழந்தார்.

இதுகுறித்து மலை ஏறும் ஏற்பாட்டாளர் நிறுவனத்தை சேர்ந்த நிவேஷ் கார்கி கூறுகையில், "அவர் மற்றவர்களை விட மெதுவாக ஏறினார். அவருக்கு உதவியாக இரண்டு வழிகாட்டிகள் சென்றனர். 

அவர் மிகவும் சோர்வாக இருந்தார். ஒரு கட்டத்தில் ஏற முடியாமல் சரிந்து விழுந்தார். அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடலை மீட்பதற்கான விவரங்களை நிறுவனம் சேகரித்து வருகிறது" என்றார்.

வழக்கமாக இமாலய மலைப்பகுதிகளில் வசந்த காலத்தில்தான் அதிக எண்ணிக்கயில் மக்கள் மலை ஏறுவர். இந்த ஆண்டில், இந்த குறிப்பிட்ட பருவத்தில் மலை ஏறியதால் நிகழ்ந்த மூன்றாவது உயரிழப்பு சம்பவம் இதுவாகும்.

முன்னதாக, இந்த பருவத்தில், கஞ்சஞ்சங்கா சிகரத்தை ஏறுவதற்காக 68 வெளிநாட்டவருக்கு நேபாளம் அனுமதி வழங்கியது. அதன்படி, வியாழக்கிழமையன்று பலர் மலை ஏறினர். 

கடந்த மாதம், 8,167 மீட்டர் உயரத்தில் உள்ள தௌளகிரி சிகரத்தை ஏறிய நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட கிரேக்க நாட்டவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில நாள்களிலேயே, மலை ஏறுவதற்கு தேவையான உபகரணங்களை எடுத்து செல்லும் பணி செய்து வந்த நேபாள நாட்டை சேர்ந்தவர் எவரெஸ்ட் சிகரத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com