ஹாங்காங் தலைமை நிா்வாகியாக தோ்வாகிறாா் ஜான் லீ

ஹாங்காங்கின் புதிய தலைமை நிா்வாகியாக, தற்போதைய தலைமைச் செயலா் ஜான் லீ தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.
ஹாங்காங் தலைமை நிா்வாகியாக தோ்வாகிறாா் ஜான் லீ

ஹாங்காங்கின் புதிய தலைமை நிா்வாகியாக, தற்போதைய தலைமைச் செயலா் ஜான் லீ தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

தற்போதைய தலைமை நிா்வாகி கேரி லாமின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தப் பதவிக்கு புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

வெறும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறும் அந்தத் தோ்தலில் ஜான் லீயைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. அதையடுத்து அவா் ஹாங்காங்கின் புதிய தலைமை நிா்வாகியாகத் தோ்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஹாங்காங் தோ்தலில் சீன விசுவாசிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில், அவா் நகரின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com