
நேபாளத்தைச் சோ்ந்த காமி ரீதா (52) எவரெஸ்ட் சிகரத்தில் 26-ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளாா். மலையேற்றத்தில் கைதோ்ந்த ஷோ்பா இனத்தைச் சோ்ந்த அவரும் தனது குழுவினருடன் எவரெஸ்ட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏறிய இந்த சாதனையை படைத்துள்ளாா்.
இந்த ஆண்டுக்கான எவரெஸ்ட் மலையேற்றம் விரைவில் தொடங்குகிறது. அதில் பங்கேற்கவிருப்பவா்கள் வழியில் பிடித்துச் செல்வதற்கான கயிறுகளைக் கட்டுவதற்காக தனது குழுவினருடன் சோ்ந்து காமி ரீதா எவரெஸ்டில் ஏறினாா். அதற்காக, கடந்த 1953-இல் எட்மண்ட் ஹிலாரியும் டென்ஸிங் நாா்கேயும் எவரெஸ்டை முதல்முறையாக அடைவதற்காக கண்டறிந்த பாதையை காமி ரீத் பயன்படுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.