
இஸ்ரேலில் கோடாரித் தாக்குதல் நடத்திய இரு பாலஸ்தீன பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எலாத் நகரில் சரமாரி கோடாரி தாக்குதல் இருவரை கைது செய்துள்ளோம். ஹெலிகாப்டா்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, எலாத் நகருக்கு அருகே பதுங்கியிருந்த அவா்கள் பிடிபட்டனா் என்று போலீஸாா் கூறினா்.
எலாத் நகரில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 3 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். இத்துடன், கடந்த 48 நாள்களாக பாலஸ்தீனா்களின் தாக்குதலுக்கு பலியான இஸ்ரேலியா்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.