இலங்கையில் வலுக்கும் வன்முறை: மகிந்த ராஜபட்ச மீது வழக்குப்பதிவு

இலங்கையில் நிலவும் வன்முறைக்கு காரணமான இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச மீது கோட்டை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மகிந்த ராஜபட்ச
மகிந்த ராஜபட்ச


இலங்கையில் நிலவும் வன்முறைக்கு காரணமான இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச மீது கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடைய போராட்டத்தின் காரணமாக எழுந்த நெருக்கடியால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தார். 

அவருடைய வீட்டிற்கு நேற்று தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் உதவியுடன் தப்பித்த ராஜபட்ச, தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பித்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. 

அதனைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு திரிகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில், கொழும்பில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது தனது ஆதரவாளா்களைத் தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தியதற்காக மகிந்த ராஜபட்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

‘வன்முறையைத் தூண்டியதற்காக மகிந்த ராஜபட்ச கைது செய்யப்பட வேண்டும். அமைதிவழியில் போராடியோா் மீது தாக்குதல் நடத்த எந்தக் காரணமும் இல்லை’ என முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா கூறினார்.

மகிந்தவை கைது செய்யக் கோரி வழக்குரைஞா்கள் சிலரும் காவல் துறை தலைமையகங்களில் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், இலங்கையில் நிகழும் வன்முறை கலவரத்திற்கு காரணமாக கொழும்பு வன்முறை குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்தா உள்பட சந்தேகிக்கப்படும் நபர்கள் என 20 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com