
திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால், நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் குவிந்ததால், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு பாதுகாப்புடன் மகிந்த ராஜபட்ச அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதுகாப்புக் காரணத்திற்காகவே மகிந்தாவை அழைத்து வந்ததாக, கடற்படை தளபதியும் ஒப்புக் கொண்டார்.
இதையும் படிக்க | இலங்கை நாடாளுமன்ற துணைத் தலைவராக அஜித் ராஜபட்ச தேர்வு
இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகிந்த ராஜபட்ச வெளியேறியுள்ளதாக தகவல் பரவி வருகின்றன.
மேலும், மகிந்த ராஜபட்ச இலங்கையிலேயே தலைமறைவாக உள்ளாரா அல்லது வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றாரா எனத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.