
மண் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கொண்டுள்ளப் பயணத்தின் ஒரு பகுதியாக சத்குரு ஜக்கி வாசுதேவ் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார்.
மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக 100 நாள்களில் 27 நாடுகள், 30 ஆயிரம் கி.மீ. இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் பயணத்தின் ஒரு பகுதியாக அபுதாபிக்குச் சென்றார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே-20) துபை உலக வர்தக நிறுவனத்தில் 10,000 மக்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.
“மழை பசுமையை உருவாக்குவதில்லை; பசுமைதான் மழையை உருவாக்குகிறது. எங்கேனும் சிறிதளவு சூரிய ஒளி கிடைத்தால் போதும் சாதாரண நிலத்தைக் கூட உழைப்பின் மூலமாக பயன்படக்கூடிய நிலமாக மாற்றிவிடலாம். இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கு மற்றும் உறுதியான தலைமையினால் இதை எளிதாக செய்து முடிக்கலாம்” என சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
விவசாய நிலங்களில் 3 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும் என்ற ஒற்றை விஷயத்தை கட்டாயமாக்குவதன் மூலம் இந்த பிரச்னைகளுக்கு எளிய தீா்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.