தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

சிங்கத்திடம் சேட்டை: விடியோவை வைரலாக்க நினைத்த ஊழியருக்கு நேர்ந்த கதி?

ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவம் தொடர்பான விடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ள

News image
Updated On :23 மே 2022, 5:28 pm IST


ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவம் தொடர்பான விடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ளது.

ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களைக் கவரும் வகையிலும், அவர்கள் விடியோ எடுத்துக் கொண்டிருந்ததால், சிங்கத்திடம் தான் விளையாடும் விடியோ வைரலாகும் என்ற நோக்கத்திலோ இந்த சேட்டையில் ஈடுபட்ட நபர், விரல்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரும்பு வேலிக்குள் இருந்த சிங்கத்தின் முகத்தில் தனது கையால் வருடி விடுவது போலவும், தள்ளுவது போலவும் அந்த ஊழியர் செய்து கொண்டிருக்க, அதனால் கடும் கோபமடைந்த சிங்கமோ, சின்னஞ்சிறு பிள்ளை என்று அவரை  நிராகரித்துக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் கோபம் வந்து, அந்த ஊழியரின் விரல்களை லாவகமாக வாய்க்குள் பிடித்துக் கொண்டது. இப்படி விளையாட்டு விபரீதமாகும் என்று நினைத்துப் பார்க்காத ஊழியரோ, விரல்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் கையை இழுக்க, மறுபுறம் அந்தப் பெரிய சிங்கமோ பதிலுக்கு தனது பலத்தைக் காட்டியது.

இறுதியில் மனிதனா வெற்றி பெற முடியும்? சிங்கமே மோதிர விரலை முழுமையாக க் கடித்துவிட, மீதமிருந்த விரல் எலும்புடன் மருத்துவமனைக்கு விரைந்தார் அந்த நபர்.

இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே விடியோ எடுத்துக் கொண்டிருந்த பார்வையாளர்களோ, இது அனைத்தும் விளையாட்டு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருக்கிறார்கள். பிறகுதான் விளையாட்டு அல்ல வினை என்று புரிந்திருக்கிறது. அதற்குள் பாதி விரலை சிங்கம் ருசிபார்த்துவிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.