பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

கிரிப்டோகரன்சியில் 1 டாலரைக்கூட முதலீடு செய்யவில்லை: பில் கேட்ஸ்

கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
Published on

கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், முதலீடு செய்யப்பட்ட நாணயங்கள் கடுமையான சந்தை மதிப்பை இழந்து வருகின்றன. 

கிரிப்டோவின் அடையாளமான பிட்காயினின் ஓர் பங்கின் விலை மூன்று வாரத்தில் ரூ.32 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.24 லட்சமாக குறைந்ததுள்ளது. இதேபோல பல நாணயங்களும் பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக, லூனா கரன்சி பங்கின் விலை ஒரே மாதத்தில் ரூ. 7,000-திலிருந்து 1 பைசாவா ஆக குறைந்ததால் அதில் முதலீடு செய்தவர்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

மேலும், எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான டோஜ் காயினின் விலையும் குறைந்து காணப்படுவதால்  முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்நிலையில், உலக பெரும் செல்வந்தவர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பில்கேட்ஸ் “மற்ற முதலீடுகளைப்போல இதில் முதலீடு செய்ய எனக்கு விருப்பமில்லை. இதுவரை நான் கிரிப்டோகரன்சியில் 1 டாலரைக்கூட முதலீடு செய்யவில்லை” என பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com