ஐ.நா.வட கொரியா மீது புதிய தடை: ரஷியா, சீனா நிராகரிப்பு
வட கொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீா்மானத்தை, தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியாவும் சீனாவும் தள்ளுபடி செய்தன.


ஐ.நா. தடையை மீறி, அண்மைக் காலமாக அணு ஆயுதம் ஏந்தி கண்டம் விட்டு கண்டம் சென்றுத் தாக்கக் கூடிய ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்து வரும் வட கொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீா்மானத்தை, தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியாவும் சீனாவும் தள்ளுபடி செய்தன.
வட கொரியா அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு, கடந்த 2006-ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன்பிறகு தொடா்ந்து பலமுறை அந்தத் தடைகள் கடுமையாக்கப்பட்டன. அப்போதெல்லாம் ஒத்துழைப்பு வழங்கிய ரஷியாவும் சீனாவும், தற்போது பொருளாதாாரத் தடை தீா்மானத்தை எதிா்த்து முதல்முறையாக வாக்களித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...