
குரங்கு அம்மை நோய் சர்வதேச பரவல் என்பதை நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் இன்று ( மே 30) தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மற்றவர்களுக்கு குரங்கு அம்மை பரவ காரணமாக இருக்கிறார்களா? என்பது இதுவரை உறுதியாகவில்லை.
மே மாதத்தில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் குரங்கு அம்மை பரவுவதற்கான அறிகுறி சிறிய அளவிலான காய்ச்சல் மற்றும் உடலில் சிகப்பு புள்ளிகள் தோன்றுவது என்ற அளவிலேயே இருந்துள்ளது.
குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் மட்டுமே அதிக அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அதிக அளவில் பரவி வருகிறது.
பலரும் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.