காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி

பாலஸ்தீனத்தின் காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் உள்பட 21 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி
Updated on
1 min read


பாலஸ்தீனத்தின் காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் உள்பட 21 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின்  வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா பகுதியில் உள்ள அகதிகள் நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் மேல் தளத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 

குடியிருப்பு வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலாக காட்சி அளித்தது. 

பயங்கர தீ விபத்தி சிக்கி 21 பேர் உடல் கருகி இறந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொழுந்துவிட்டு எரியும் கட்டடத்திற்கு வெளியே மக்கள் அலறுவதைக் காண முடிந்தது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெருக்களில் அழுது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின்படி, கட்டடத்திற்குள் அதிக அளவு பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தீ பரவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கட்டடத்தில் இருந்த அனைவரும் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன காசாவில் உள்ள எட்டு அகதிகள் முகாம்களில் ஜபாலியாவும் ஒன்றாகும், இது 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மற்றும் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com